» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வடவல்லநாடு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு
புதன் 14, ஜனவரி 2026 4:31:16 PM (IST)

வடவல்லநாடு ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிட அரசு அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, இன்று (14.01.2026) ஸ்ரீவைகுண்டம் வட்டம், வடவல்லநாடு ஊராட்சியில் அனைத்து சமுதாய பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசு உயர் அலுவலர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவ்விழாவில் மயிலாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பராம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாதஸ்வரம், தவில் போன்ற இசைக் கருவிகள் மூலம் இசை கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அவர்களை வரவேற்று அழைத்துச் சென்று, பராம்பரிய முறையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடினார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளானது, இயற்கைக்கும் உழைப்பிற்கும் நன்றி கூறும் திருநாளாகவும், சமூக வேறுபாடுகளை மறந்து, "பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற உயரிய தமிழர் சிந்தனையை நடைமுறையில் வெளிப்படுத்தும் நாளாகவும் விளங்குகிறது.
மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்ற சமத்துவ பொங்கல் திருவிழாவில், பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த மகிழ்ச்சி, உங்கள் உள்ளங்களிலும், உங்களுடைய இல்லங்களிலும், பொங்கட்டும்! என்று இந்த இனிய நேரத்தில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கணக்கு : உத்திரப்பிரதேச வாலிபர் கைது
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:36:56 PM (IST)

கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:42:58 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:18:25 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ரூ. 784 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:12:09 PM (IST)

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் : காவல் நிலையம் முற்றுகை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:02:32 PM (IST)

வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:55:28 PM (IST)










