» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிப்-12ல் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் : தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆலோசனை!
புதன் 14, ஜனவரி 2026 3:38:50 PM (IST)

மத்திய அரசைக் கண்டித்து பிப்-12ல் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தம் தொடர்பாக தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் தொழிலாளி-விவசாயி விரோத நடவடிக்கைகளை கைவிடக் கோரியும், 50 கோடி தொழிலாளர்கள் அனுபவித்து வரும் தொழிற்சங்க உரிமையை பறிக்கும் கார்பரேட் ஆதரவு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற கோரியும், மின்சாரதுறையை கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் மின்சார சட்டம் 2025 ஐ கைவிடவும், அணு மின் உற்பத்தி துறையில் தனியார் கார்பரேட்டுகளை அனுமதிக்கும் முடிவை திரும்பப்பெற கோரியும், பொது சொத்துகளை கார்பரேட் நிறுவனங்களுக்கு கைமாற்றுவதை நிறுத்தக் கோரியும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை வேலை உரிமையை பறித்து ஆட்சியாளர்களின் கருணைத் திட்டமாக மாற்றுவதை திரும்பப்பெற வலியுறுத்தியும், நாட்டின் பிரதான 11 மத்திய தொழிற்சங்கங்களும், துறைவாரி சம்மேளனங்களும் பிப் 12 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
500 க்கு மேற்பட்ட விவசாய அமைப்புகளின் ஒற்றுமை மேடையான சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பும் இந்த வேலைநிறுத்தத்தை ஆதரித்து களமிறங்குவதாகவும் கிராமப்புற கிளர்ச்சிகளை உருவாக்குவதாகவும் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகும் பிப்-12 வேலைநிறுத்தத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிகரமாக்குவது குறித்த அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று தூத்துக்குடி மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் தொழிலாளர் முன்னேற்றப் பேரவை மாவட்டச் செயலாளர் சுசீ.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் நோக்கங்களை சிஐடியு தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஆர.ரசல் விளக்கி பேசினார். ஏஐடியுசி சார்பில் மாவட்டப் பொருளாளர் ஏ.பாலசிங்கம், சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.பேச்சிமுத்து, மாவட்டப் பொருளாளர் எஸ்.அப்பாத்துரை, கணபதி சுரேஷ், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் அம்ஜத், மாவட்டச் செயலாளர் த.சிவராமன், மாநில துணைத்தலைவர் றி.சகாயம், ஹெச்எம் எஸ் மாவட்டத் தலைவர் ராஜ்குமார், மாநில துணைத்தலைவர் துறைமுகம் சத்யா, ஐஎன்டியுசி பாலகிருஷ்ணன், சுரேஷ்குமார், யுடியுசி மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர், சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஜன 23 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்த ஆதரவு மாநாட்டிற்கு அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் தூத்தக்குடி மாவட்டத்தில் இருநது தனியாக பேருந்துகள், வேன்கள் மற்றும் ரயில் மூலமாக 500 பேர் பங்கேற்பது என்றும், மாநாட்டிற்கு பிறகு ஜன 24 அன்று மாலை பீச் ரோடு ஹெச்எம்எஸ் அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள், மத்திய மாநில அரசுத்துறை ஊழியர் சங்கங்கள், ஓய்வூதியர் சங்கங்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர் அமைப்புகள், சுயேட்சையான தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து பகுதியினர் பங்கேற்கும் விரிவான கூட்டம் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசின் தொழிலாளி-விவசாயி விரோத நடவடிக்கைகளை மக்களிடம் அம்பலப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் விரிவான பிரச்சார இயக்கத்தை நடத்திவும், பிப்-12 அன்று அனைத்து நிறுவனங்களிலும் வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வதுடன், ஒன்றிய அளவில் 3000 க்கும் மேற்பட்ட தொழிலாளிகள், விவசாயிகள் பங்கேற்கும் மறியல் போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாட்கோ மூலம் கேட்டரிங் டெக்னாலஜி பயிற்சி : மாணாக்கர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 3:29:37 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நாய் கடித்து 14 பணியாளர்கள் காயம்!
வெள்ளி 6, மார்ச் 2026 3:22:22 PM (IST)

ஈரான் மீதான தாக்குதலைக் கண்டித்து வ.உ.சி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 6, மார்ச் 2026 11:29:00 AM (IST)

துணை முதல்வர் உதயநிதி நாளை தூத்துக்குடி வருகை: ரூ.300 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கம்!
வெள்ளி 6, மார்ச் 2026 11:17:52 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 14-ல் தேசிய மக்கள் நீதிமன்றம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:12 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் கோவிலில் ரூ.1.28 கோடியில் புதிய தேர் : பூமிபூஜையுடன் பணிகள் தொடக்கம்
வெள்ளி 6, மார்ச் 2026 8:32:59 AM (IST)