» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் திருமறையூரில் மரம் நடும் விழா!

சனி 9, மார்ச் 2024 12:37:12 PM (IST)



திருமறையூரில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறையும், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து மரங்கள் நட்டினர்.

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறை மற்றும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி. எஸ். ஐ. பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து நடத்திய மரம்நடுவிழா திருமறையூரில் நடைபெற்றது.

இந்நிகழ் வில்சினாடுமாமன்றசுற்றுச் சூழல் கரிசனைத் துறை இணை இயக்குனர் ஜான் சாமுவேல் கலந்து கொண் டு மரங்கள் நட்டினார். பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், நாட்டு நலப்பணித் திட்ட இயக்குனர் லிவிங்ஸ்டன், பேராசிரியர்கள் மர்காஷி யஸ் சாமுவேல்ராஜ், லவ் சன், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப் பணி திட்ட மாணவர்களுக்கும் மற்றும் கூடியிருந்த பொது மக்களுக்கும் இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மரங்கள் வளர்ப்ப தின் முக்கியத்துவம் குறித்து ஜான் சாமுவேல் சிறப்புரை ஆற்றினார். இவர்களுடன் திருமறையூர் சேகரம் மறுரூப ஆலய திரு ச்சபையின் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜெயபால், தேவதாஸ், முதியோர் இல்ல பொறுப்பாளர் வனமோகன்ராஜ், சர்ச்சில், மற்றும் முதியோர் இல்லத் தில் வசிக்கும் அனைத்து மக்களும் பங்கு பெற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory