» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி ஆரம்பகால மாணவர்கள் கூடுகை!
ஞாயிறு 28, ஏப்ரல் 2024 8:57:07 AM (IST)

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி ஆரம்ப கால மாணவர்கள் கூடுகை நடை பெற்றது.
நாசரேத், ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி துவங்கிய வருடத்தில் முதன் முதலில் பயின்ற மாணவர்கள் 25ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து அம்மாணவர்களின் கூடுகை நடைபெற்றது. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல லே செயலரும் கல்லூரியின் தாளாளருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் முதன்மை உரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை கிங்ஸ் மருத்துவ கல்லூரி இயக்குனரும் பாலிடெக்னிக் கல்லூரி துவக்க காலத்தில் முதல்வராக பணியாற்றியவருமான குமார் சார்லி பால் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பேசினர். கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் நன்றி கூறினார்.
விழாவில் கல்லுரி ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களின் குடும் பத்தினர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை முன்னாள் மாணவர்கள் சுரேஷ், ஆனந்த், கதிர்வேல்ராஜா, கந்தசாமி, லிவிங்ஸ்டன் நவராஜ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
புதன் 18, ஜூன் 2025 3:09:33 PM (IST)

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)

தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்!
திங்கள் 16, ஜூன் 2025 4:47:10 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:44:57 AM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி
சனி 24, மே 2025 4:00:22 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)
