» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா
சனி 17, பிப்ரவரி 2024 9:31:33 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கூடைப் பந்து மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தலைமையாசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் முன்னாள் கூடைப்பந்து வீரரும், நாசரேத் கால்நடை மருத்துவமனையின் மருத்துவ அலுவலருமான டாக்டர் மதியழகன் கலந்து கொண்டு, புதுப்பிக்கப்பட்ட கூடைப்பந்து மைதானத்தை திறந்து வைத்தார்.
சர்வதேச தரத்தில் அமைக்கப்பட் டுள்ள கூடைப்பந்து மைதானம் புதிதாக வர்ணம் பூசப்பட்டு, எல்லை கோடுகள் வரையப்பட்டு, புதிய கூடைப்பந்து வலைகள் பொருத்தப்பட்டு, அனைத்து வகைகளிலும் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மைதானம் திறப்பு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டிகளும் நடைபெற்றன. மர்காஷிஸ் ஸ்டார்ஸ், மர்காஷிஸ் டைமண்ட்ஸ், மர்காஷிஸ் டுவிங்லர்ஸ், மர்காஷிஸ் கபடியன்ஸ் ஆகிய நான்கு அணியினர் சிறப்பாக விளையாடினர்.
வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கும், பங்குபெற்ற வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகளை தொழிலதிபர் ஜெபஸ் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களும், விளையாட்டு வீரர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் தனபால் கூடைப்பந்து போட்டிகளின் நடுவராக பணியாற்றினார். அறிவியல் ஆசிரியர் ஜென்னிங்ஸ் காமராஜ் நன்றி கூறினார். ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர் மற்றும் நிர்வாகப் பிரிவு அறிவியல் ஆசிரியர் சங்கர் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்!
வியாழன் 20, பிப்ரவரி 2025 5:51:03 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)
