» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

வியாழன் 15, பிப்ரவரி 2024 4:40:03 PM (IST)நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 

தாளாளர் சுதாகர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் முன்னிலை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். சாத்தான்குளம் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் இயற்பியல் ஆசிரியை ரெஜினா ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கி வைத்தார். 

ஆண்டுதோறும், பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியில், மாணவர்கள், பல்வேறு அறிவியல் சார்ந்த மாதிரிகளையும், இயங்கும் உபகரணங்களையும் காட்சிப்படுத்தினர். 

குறிப்பாக ராணுவ வீரர்கள் பதுங்கு குழிகளில் பயன்படுத்தும் பெரிஸ்கோப், பேட்டரியில் இயங்கும் சிறிய ராட்டினம், எரிமலையின் மாதிரி, தாவர செல்கள், விலங்கு செல்களின் மாதிரி, பசுமை வீடுகள், சூரிய மின் ஆற்றலில் இயங்கும் கட்டிடங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. மாணவர்கள், தாங்கள் செய்து வைத்திருந்த மாதிரிகளின் செயல்பாட்டினை பார்வையாளர்களுக்கு விளக்கி கூறினர். 

தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவம் குறித்தும், நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமன் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. நிர்வாகப் பிரிவு அறிவியல் ஆசிரியர் சங்கர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். கண்காட்சியில் பங்கு பெற்ற மாணவர்களை அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியைகள், மற்றும் அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து

Vanakkamda maplaFeb 15, 2024 - 10:47:13 PM | Posted IP 172.7*****

Haha 🤣

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory