» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
போலியோ இல்லா உலகத்தை படைத்திட மாணவர்கள் உறுதியேற்பு
செவ்வாய் 24, அக்டோபர் 2023 3:03:37 PM (IST)

கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் உலக போலியோ தினம் என்லைட் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் நடந்தது.
உலகை அச்சுறுத்திய போலியோ நோய்க்கு முதலில் தடுப்புமருந்து கண்டுபிடித்த ஜோனாஸ் சால்க்கை கவுரவிக்கும் விதமாக அக்-24ல் உலக போலியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டியில் நடந்த உலக போலியோ தின நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். பயிற்சி மைய நிர்வாகி மகேஷ் முன்னிலை வகித்தார்.ரோட்டரி சங்க செயலாளர் சரவணன் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் முத்து செல்வம்கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் உள்பட போட்டி தேர்வு மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து கிடைப்பதை உறுதிசெய்திடவும், போலியோ இல்லாத உலகத்தை உருவாக்கிடவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


