» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளிகளின் ஆண்டு விழா

வியாழன் 19, அக்டோபர் 2023 5:25:18 PM (IST)



குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளிகளின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. 

ஆண்டு விழாவை முன்னிட்டு துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், அதனைத் தொடர்ந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடந்தது. மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொருளாளர் விஜயசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிர்வாக அலுவலர் சுரேஷ் காமராஜ் வரவேற்றார். தலைமையாசிரியர் வித்யாதரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கனிமொழி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் கார்த்திகேசன், செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழாசிரியர் ராஜகுமார் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory