» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாகலாபுரம் கல்லூரியில் எனது மண் எனது தேசம் நிகழ்ச்சி

புதன் 18, அக்டோபர் 2023 8:01:40 PM (IST)



நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பாக எனது மண் எனது தேசம்  என்ற ஒன்றிய அளவிலான கலச யாத்ரா நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம்  நேரு யுவகேந்திரா சாா்பில் நாகலாபுரம் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், கோவில்பட்டி அஞ்சல்துறை இணைந்து நடத்திய எனது மண் எனது தேசம் நிகழ்ச்சி கல்லூரி கூட்ட அரங்கில் வைத்து கல்லூரி முதல்வர் ராமலிங்கம் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. புதூா் ஒன்றிய அளவிலான கிராம பகுதி மண்களை சேர்க்கும் கலச யாத்ரா நிகழ்ச்சி நடந்தது.

கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட கலச யாத்ரா பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எனது மண் எனது தேசம் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இறுதியாக புதூர் ஒன்றிய கிராமப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட மண் ஒன்றாக சேர்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் இசக்கி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகேஷ், கல்லூரி பேராசிரியை லீலா, கோவில்பட்டி கோட்ட அஞ்சல் துறை அலுவலர்கள் சுரேஷ், வெற்றி செல்வி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory