» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

காமராஜ் கல்லூரியில் போதை விழிப்புணர்வு போட்டிகள்

வெள்ளி 7, ஜூலை 2023 8:26:59 PM (IST)



தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை நிர்வாகமும், காமராஜ் கல்லூரி வரலாற்றுத் துறையும் இணைந்து, உலக போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழியை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.

போதைப்பொருள் ஒழிப்பதில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது. கட்டுரைப் போட்டியில், இயற்பியல் துறை முதுகலை இரண்டாமாண்டு மாணவி ராமலட்சுமி முதல் பரிசையும், விலங்கியல் துறை இளங்கலை முதலாமாண்டு மாணவி ஏ. பாரதி இரண்டாம் பரிசையும், பொருளாதாரத்துறை இளங்கலை இரண்டாமாண்டு மாணவி சு. ஆர்த்தி பாரதி மூன்றாவது பரிசையும் பெற்றனர்.

பேச்சுப் போட்டியில் வரலாற்றுத்துறை இளங்கலை இரண்டாமாண்டு மாணவி அஜிதா முதல் பரிசையும், இயற்பியல் துறை முதுகலை இரண்டாமாண்டு மாணவி ஜெசீனா இரண்டாம் பரிசையும், மைக்ரோ பயாலஜி முதுகலை இரண்டாமாண்டு மாணவி பால சரண்யா மூன்றாவது பரிசையும் பெற்றனர்.

ஓவியப் போட்டியில் வணிக மேலாண்மை இளங்கலை மூன்றாமாண்டு மாணவர் சூர்யா முதல் பரிசையும், வரலாற்றுத் துறை இளங்கலை மூன்றாமாண்டு மாணவர் கார்த்திக் இரண்டாம் பரிசையும், தாவரவியல் இளங்கலை முதலாமாண்டு மாணவி மகாலட்சுமி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையர் பி. செல்வநாயகம் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் பூங்கொடி, கலால் கோட்ட அலுவலர் தாமஸ் பயஸ் அருள், ஆய்வாளர் பிரபாகரன், கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ஆ. தேவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கல்லூரி வரலாற்றுத் துறை மூன்றாமாண்டு மாணவர் நத்தீஷ் வரவேற்றார். முடிவில், இரண்டாமாண்டு மாணவி கங்காதேவி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory