» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா: கனிமொழி வழங்கினார்!
சனி 27, மே 2023 10:26:32 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை கனிமொழி எம்பில் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், வல்லநாடு கஸ்பா கிராமம், கலியாவூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம் என்பவரின் மகன் அர்ஜூன் பிரபாகரன் திருநெல்வேலி மா.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் இக்கல்வியாண்டில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 495/500 மதிப்பெண் பெற்று திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.
இம்மாணவரின் ஏழ்மை நிலையினை கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாணவருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, மூக்கு கண்ணாடி மற்றும் மேல்நிலை படிப்புக்கு தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.அதனடிப்படையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் .கனிமொழி மாணவர் அர்ஜூன் பிரபாகரன்-க்கு இலவச வீட்டுமனைப்பட்டா, மூக்கு கண்ணாடி மற்றும் மேல்நிலை படிப்புக்கு தேவையான உதவிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலையில் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார், ஆகியோர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


