» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா

திங்கள் 22, மே 2023 11:59:38 AM (IST)தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஸ்கேட் கல்வி குழும துணைத் தலைவர் தாளாளர் அகஸ்டிஸ் பிரியதர்ஷினி  அருண் பாபு, தக்ஷின் கேட்வே டெர்மினல் தூத்துக்குடி தலைமை நிர்வாக அதிகாரி செந்தில்குமார் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர். 

கல்லூரி இயக்குனர் ஜார்ஜ் கிளின்டன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானசந்திரன் ஆண்டறிக்கையும் மாணவர்களின் சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார். கல்லூரியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை பேராசிரியர்களுக்கும் அனைத்து துறையில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் அரசு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசு கோப்பைகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

விழாவில் விஜய் டிவி புகழ் குரேஷி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். கல்லூரி மாணவ மாணவிகளின் கலக்கலான கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விழாவில் பொது மேலாளர் கிருஷ்ணகுமார், மாணவர் சேர்க்கைக்கான இயக்குனர் ஜான் கென்னடி, வேலைவாய்ப்பு இயக்குனர் முகமது சாதிக், கல்லூரி இயக்குனர் ஜார்ஜ் கிளின்டன், பேராசிரியர்கள் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் விக்னேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory