» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் செவிலியர் தினவிழா
திங்கள் 15, மே 2023 3:46:49 PM (IST)
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் செவிலியர் தினவிழா நடந்தது. .
கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் தலைமை வகித்தார். முதல்வர் சோபியா செல்வராணி முன்னிலை வகித்தார். பேராசிரியர் ரூபன் வரவேற்றார். பேராசிரியர் ஸ்வேதா செவிலியர் தினத்தின் கருப்பொருளைப்பற்றி எடுத்துரைத்தார். மாணவி ஏஞ்சல் செவிலியர் பற்றி சிறப்பு பாடல் பாடினார். மாணவ- மாணவிகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாணவி ஜெசி நன்றி கூறினார்.