» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பிளஸ் 2 தேர்வு மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி 100சதவீதம் தேர்ச்சி
புதன் 10, மே 2023 2:39:45 PM (IST)
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2தேர்வு மொத்தம் 78 மாணவ- மாணவிகள் எழுதினர். அதில் 78பேர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இது 100சதவீதம் தேர்ச்சி யாகும்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி நிஷா, தமிழ் 95, ஆங்கிலம் 75,பொருளியல் 99, வணிகவியல்100, கணக்குப்பதிவியல்100, சிறப்பு தமிழ் 98ஆக மொத்தம் 567 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும் , மாணவிகள் அனுசியா, கீர்த்தியா ஆகியோர் 552மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தையும், மாணவி ஜெனிபா 533 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளை சேகர தலைவர் டேனியல் ஞானப்பிரகாசம், பள்ளி தாளாளர் செல்வின், தலைமை ஆசிரியர் எட்வர்ட், பள்ளி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பழைய மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள் பாராட்டினர்.
காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு மொத்தம்162 மாணவிகள் எழுதினர்.அதில்161 மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இது 99சதவீதம் தேர்ச்சியாகும். இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி அருள்ரனிஷா 570 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், மாணவி பிரியதர்ஷினி 553 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தையும், மாணவி ஆலின்ஸ் 549 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி நல மன்ற தலைவர் அஷரப், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நுஜ்ஹா, பள்ளி தலைமை ஆசிரியை ஹெப்சிபா லைட், பள்ளி மேலாண்மை க்குழு தலைவர் ரஜானா மற்றும் அதன் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்.எம்.எம்.எஸ். தகுதித் தேர்வு: புனித அன்னாள் பள்ளி மாணவர்கள் சாதனை!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:16:44 AM (IST)

தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி: மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
புதன் 16, ஏப்ரல் 2025 11:03:04 AM (IST)

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)
