» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
அரசுப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டம்!
திங்கள் 20, மார்ச் 2023 8:07:30 PM (IST)

எட்டயபுரம் அருகே இராமனூத்து அரசுப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டம் நடந்தது.
எண்ணும் எழுத்தும் கற்றல் கொரோனா பெருந் தொற்று காரணமாக சற்று தொய்வு ஏற்பட்டது. கற்றல் இடைவெளியை போக்கும் விதமாக தமிழக கல்வித்துறையால் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தி தொடங்கப்பட்டது. இதனை மீண்டும் செயல்படுத்தி அதனை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்வுக்கு பள்ளி தலைமையாசிரியர் இப்ராஹிம் தலைமை வகித்தார். ஒன்று முதல் மூன்று வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். இத்திட்டம் மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக மாணவர்கள் செய்து கொண்டு வந்த கற்பித்தல் தொடர்பான துணைக்கருவிகள் பெற்றோர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.
நிகழ்வில் அனைவர்மத்தியிலும் மாணவர்களின் கற்றல் திறனை வெளிக்காட்டும் செயல்பாடுகளைச் செய்து காட்டினர். பள்ளி உதவியாசிரியர் இந்திரா தன்னார்வலர் அய்யப்பன் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மலையரசி புதிய பாரத எழுத்தறிவு தன்னார்வலர் நாகரத்தினம் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


