» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி: சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டாமிடம்!
வெள்ளி 17, மார்ச் 2023 3:16:23 PM (IST)
நெல்லையில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றனர். .
திருநெல்வேலி FX பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற புதிய கண்டு பிடிப்புகளுக்கான புராஜக்ட் போட்டியில் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக், இயந்திரவியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிதம்பரம், ஸ்ரீராம் செல்வா, நிர்மல் கணேஷ், ஷேக்னூர் முகமது ஆகியோர் தயாரித்த மோட்டார் பொருத்தப்பட்ட கிரேன் இரண்டாம் இடம் பிடித்தது,
இதே போல் மற்றொரு பிரிவில் விக்னேஷ் ராம், ஜாய்ஸன், உதய சங்கர், மாடசாமி ஆகியோர் மல்டி ஸ்பின்ட்ல் எனும் இயந்திரத்தை வடிவமைத்து இருந்தனர். வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன், முதல்வர் ஆவுடையப்பன், துறை தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர். இந்நிகழ்வில் வளாக தேர்வு அலுவலரும், இயந்திரவியல் துறை தலைவருமான ஆறுமுக சேகர் உடனிருந்தார்.