» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பிள்ளையன்மனை பள்ளியில் சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வியாழன் 16, மார்ச் 2023 3:21:41 PM (IST)

நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை ஜிவிஜி டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் ஸ்ரீவைகுண்டம் பட்டு கேஸ் ஏஜென்சி சார்பில் பிரதம மந்திரி எல்ஜிபி சமையல் எரி வாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவி ஜேஸ்மின் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பட்டு கேஸ் ஏஜென்சி பொது மேலாளர் -விஜய் ஜேசுதாஸ் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை இன்பவல்லி, சுகாதார ஆய்வாளர் ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டு கேஸ் ஏஜென்சி மேலாளர், மயில்ராஜ், எரிவாயு விழிப்புணர்வு பற்றியும், மெக்கானிக் அய்யம்பெருமாள், எரிவாயு பாதுகாப்பு பற்றி கூறினர். பின்னர் வாடிக்கையாளர்ளின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது.
இதில் கிராம சுகாதார செவிலியர் -சுப்புலட்சுமி, ,அங்கன்வாடி பணியாளர் - பெமினா , ஊராட்சி செயலர் அழகுமாரி, பட்டு கேஸ் ஏஜென்சி ஊழியர்கள் ஜெகன், சிவா, முத்து, ஜெபராஜ் , தனசுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து எரிவாயு அடுப்பு பழுதுபார்ப்பு முகாம் பிள்ளையன்மனை கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகில் வைத்து நடந்தது. பட்டு கேஸ் ஏஜென்சி மேலாளர் மயில்ராஜ் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா: கனிமொழி வழங்கினார்!
சனி 27, மே 2023 10:26:32 AM (IST)

தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
வெள்ளி 26, மே 2023 11:40:15 AM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா
திங்கள் 22, மே 2023 11:59:38 AM (IST)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.5 சதவீதம் தேர்ச்சி!
சனி 20, மே 2023 10:58:32 AM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் செவிலியர் தினவிழா
திங்கள் 15, மே 2023 3:46:49 PM (IST)

பிளஸ் டூ தேர்வில் நாசரேத் சாலமோன் பள்ளி சாதனை
புதன் 10, மே 2023 7:36:33 PM (IST)
