» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 65 மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
வெள்ளி 10, மார்ச் 2023 11:08:00 AM (IST)

தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பயிலும் அனைத்து துறை மாணவர்கள் 65 பேருக்கு இன்டெர்ன்ஷிப் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் படிக்கும் போதே வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் 4 ஆண்டுகள் படித்து முடிக்கும் போதே மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் அளவுக்கு கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள ஆய்வகங்கள் மூலமாக மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. முன்னணி நிறுவனங்களில் இருந்து வருகை தரும் வல்லுநர்கள் மாணவர்களுக்கு நேரடி பயிற்சியும், ஆன் லைன் பயிற்சியும் அளித்து வருவதால், பன்னாட்டு நிறுவன நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
இதன் அடிப்படையில் பெங்களூருவில் செயல்படும் ஸ்நெய்டர் எலக்ட்ரிக் நிறுவனத்தில் ரூ.18ஆயிரம் மாத சம்பளத்தில் படிக்கும்போதே இன்டெர்ன்ஷிப் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதற்காக ஊக்கம் அளித்த கல்லூரி இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன், முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், வேலைவாய்ப்பு துறை இயக்குநர் ரவீந்தரன், நிர்வாக அலுவலர் விக்னேஷ், அனைத்துறை பேராசிரியர்கள் மற்றும் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


