» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஊக்க மருந்து சோதனை: பளு தூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானுவுக்கு 4 ஆண்டு தடை!

செவ்வாய் 4, ஏப்ரல் 2023 5:29:11 PM (IST)

ஊக்க மருந்து பயன்படுத்தியது சோதனையில் உறுதியானதால் பளு தூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானுவுக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்திய பளு தூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு, 2014 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்த நிலையில், குஜராத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் இடையே தேசிய போட்டிகள் நடந்தன. அப்போது, செப்டம்பர் 30-ந்தேதி சஞ்சிதாவிடம் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டது.

இதில், துரோஸ்டானோலோன் மெட்டபோலைட் என்ற உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் தடை செய்த பட்டியலில் இடம் பெற்ற ரசாயன பொருளை சஞ்சிதா பயன்படுத்தி இருந்தது உறுதியானது. இதனை தொடர்ந்து, அவருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகம் விதித்து அதற்கான உத்தரவை இன்று வெளியிட்டு உள்ளது.

சைதன்ய மகாஜன் தலைமையிலான 3 பேர் கொண்ட ஒழுங்குமுறை குழு இந்நடவடிக்கையை எடுத்து உள்ளது. இதன்படி, சஞ்சிதாவின் தற்காலிக சஸ்பெண்டு காலம் ஆரம்பித்த 2022-ம் ஆண்டு நவம்பர் 12-ல் இருந்து இந்த தடை காலம் தொடங்கும். இதன் தொடர்ச்சியாக தேசிய விளையாட்டு போட்டியில் சஞ்சிதா பெற்ற வெள்ளி பதக்கம் பறிக்கப்படும். எனினும், 21 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் அவருக்கு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory