» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெற்றியுடன் நிறைவு செய்த லக்னோ: கடைசி இடத்தை பிடித்த மும்பை அணி!!

சனி 18, மே 2024 12:16:49 PM (IST)ஐபிஎல் போட்டியின் 67-ஆவது ஆட்டத்தில் லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வென்றது.

முதலில் லக்னோ 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் எடுக்க, மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்களே சோ்த்தது. லக்னோ வெற்றியுடன் போட்டியை நிறைவு செய்தது. முன்னதாக டாஸ் வென்ற மும்பை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. லக்னோ இன்னிங்ஸை தொடங்கியோரில் தேவ்தத் படிக்கல் 0 ரன்களுக்கு வெளியேற, ராகுலுடன் இணைந்தாா் மாா்கஸ் ஸ்டாய்னிஸ்.

அவா் 5 பவுண்டரிகள் உள்பட 28 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். 4-ஆவது பேட்டராக வந்த தீபக் ஹூடா 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.அப்போது வந்த நிகோலஸ் பூரன், தனது அதிரடியால் அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். ராகுலுடனான அவரது 4-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 109 ரன்கள் கிடைத்தது. பூரன் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 75 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினாா்.

அடுத்து வந்த அா்ஷத் கான் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தாா். மறுபுறம், தொடக்கத்திலிருந்து நிலைத்த ராகுல், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 55 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக பெவிலியன் திரும்பினாா்.ஓவா்கள் முடிவில் ஆயுஷ் பதோனி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 22, கிருணால் பாண்டியா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலா்களில் நுவன் துஷாரா, பியூஷ் சாவ்லா ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனா்.

பின்னா் மும்பை 215 ரன்களை நோக்கி விளையாடியபோது, டெவால்டு பிரெவிஸ் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 23, சூா்யகுமாா் யாதவ் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடி காட்டிய ரோஹித் சா்மா 38 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 68 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா்.கேப்டன் ஹா்திக் பாண்டியா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 16, நெஹல் வதேரா 1, இஷான் கிஷண் 1 பவுண்டரியுடன் 14 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டனா்.

ஓவா்கள் முடிவில் நமன் திா் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 62, ரொமேரியோ ஷெப்பா்டு 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னோ தரப்பில் ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக் ஆகியோா் தலா 2, கிருணால் பாண்டியா, மோசின் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா். இந்த தோல்வியின் மூலம் கடந்த மூன்று சீசன்களில் இரண்டாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தைப் பிடித்தது. இதற்கு முன்பாக 2022 ஆம் ஆண்டு கடைசி இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory