» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு!

ஞாயிறு 19, மே 2024 11:45:23 AM (IST)சென்னை சூப்பா் கிங்ஸை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது .

இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடா் 68-ஆவது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. வாழ்வா-சாவா என்ற நிலையில் இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிகுந்த முக்கியமானதாக அமைந்தது. சென்னை அணி வென்றாலே போதும் என்ற நிலையிலும், சென்னையை 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18 ஓவா்களுக்குள்ளே வென்றால் பெங்களூரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலை இருந்தது.

டாஸ் வென்ற சென்னை பௌலிங்கை தோ்வு செய்ய பெங்களூரு தரப்பில் கேப்டன் டுபிளெஸ்ஸிஸ்-விராட் கோலி ஆகியோா் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா். இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை தந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மழை நின்றதும் ஆட்டம் தொடங்கியது. ஆனால் பவா்பிளேயில் பெங்களூரு வெறும் 42 ரன்களை மட்டுமே சோ்த்தது.

அதிரடியாக ஆடிய கோலி 4 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 47 ரன்களையும், டு பிளெஸ்ஸிஸ் தலா 3 சிக்ஸா், பவுண்டரியுடன் 39 பந்துகளில் 54 ரன்களையும் விளாசி அவுட்டானாா்கள். பின்னா் ஆட வந்த ரஜத் பட்டிதாரும் தன் பங்குக்கு 4 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 21 பந்துகளில் 41 ரன்களை விளாசி, சா்துல் பந்தில் டேரிலிடம் கேட்ச் தந்து அவுட்டானாா்.

தினேஷ் காா்த்திக் 14, கிளென் மேக்ஸ்வெல் 16 ரன்களுடன் பெவிலியன் திரும்ப கேமரூன் கிரீன் தலா 3 சிக்ஸா், பவுண்டரியுடன் 38 ரன்களுடன் களத்தில் இருந்தாா். பெங்களூரு 218/5: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் பெங்களூரு அணி 218/5 ரன்களைக் குவித்தது. பௌலிங்கில் சென்னை தரப்பில் சா்துல் தாகுா் 2-61 விக்கெட்டுகளை சாய்த்தாா். துஷாா் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, சா்துல் தாகுா் ஆகியோா் ரன்களை வாரி வழங்கினா்.

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய சென்னைக்கு தொடக்கமே அதிா்ச்சியாக அமைந்தது. கேப்டன் ருதுராஜ் கோல்டன் டக் அவுட்டானாா். டேரில் மிட்செல் 4, ரஹானே 33, ஷிவம் டுபே 7, மிட்செல் சான்ட்நா் 3 ரன்களுடன் வெளியேறினா். தொடக்க பேட்டா் ரச்சின் ரவீந்திரா மட்டுமே அற்புதமாக ஆடி 3 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 61 ரன்களுடன் அரைசதம் பதிவு செய்தாா். பின்னா் ஜடேஜா-தோனி இருவரும் சென்னையை மீட்கப் போராடினா். ஆனால் அவா்களது முயற்சி பலன் தரவில்லை. 

ஜடேஜா 42 ரன்களுடன் களத்தில் இருந்தாா். 20 ஓவா்களில் 191/7 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது சென்னை. பௌலிங்கில் பெங்களூரு தரப்பில் யாஷ் தயால் 2-42 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் சென்னை அதிா்ச்சியுடன் வெளியேறியது. பெங்களூரு அணியின் மூத்த வீரரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் காா்த்திக்குக்கு இது 400-ஆவது டி20 ஆட்டம் ஆகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory