» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்திய மாதர் சங்கத்தினர் குண்டுகட்டாகக் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 3:22:26 PM (IST)

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் காத்திருப்பு போராட்டம் நடத்திய மாதர் சங்கத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு முழு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி. சுனில் குமார் தலைமையிலான காவல்துறையினர், இப்போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்தனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அங்கிருந்து கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர். ஆனாலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால், காவல்துறையினர் பெண்களைப் பலவந்தமாக அப்புறப்படுத்தினர்.
இதில் சில பெண்களைக் காவல்துறையினர் தூக்கிச் சென்றும், வலுக்கட்டாயமாகப் பிடித்துக் காவல் வாகனத்தில் ஏற்றியும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் கடும் பரபரப்பான சூழல் நிலவியது. இந்தக் காத்திருப்பு போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜானகி தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் பூமயில் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவிகள் கருப்பு உடை அணிந்து போராட்டம்!
வெள்ளி 24, ஜூலை 2026 3:58:42 PM (IST)

நெல்லை கேன்சர் மருத்துவமனை கட்டிடப் பணிக்கு டிஎம்பி அறக்கட்டளை ரூ.1 கோடி நிதி உதவி!
வெள்ளி 24, ஜூலை 2026 3:42:10 PM (IST)

தூத்துக்குடியில் 6 மாதங்களாக வாடகை செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி!
வெள்ளி 24, ஜூலை 2026 3:12:01 PM (IST)

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரிக்கை : தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 24, ஜூலை 2026 12:10:56 PM (IST)

தூத்துக்குடி காவல் நிலைய மரண விவகாரம்: இளைஞர் அருணாச்சலத்தின் உடல் ஒப்படைப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 12:04:00 PM (IST)

கடைகளில் 240 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பறிமுதல் – ரூ.13,000 அபராதம்!
வெள்ளி 24, ஜூலை 2026 11:30:47 AM (IST)








