» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் திருக்கைலாயக் காட்சி: வெள்ளை யானை உலா; திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 23, ஜூலை 2026 8:44:09 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு கோவில் யானை வெள்ளை நிறத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரைச் சிவபெருமான் வெள்ளை யானையில் (ஐராவதம்) திருக்கைலாயத்திற்கு அழைத்து வரச்செய்து காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம்.இதனை நினைவுகூரும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோவில் யானை தெய்வானையின் உடல் முழுவதும் அரிசி மாவு, திருநீறு பூசப்பட்டது.
உடல் முழுவதும் வெள்ளை நிறமாகக் காட்சியளித்த தெய்வானை யானை கோவிலில் இருந்து புறப்பட்டது. யானையின் பின்னால் சுந்தரமூர்த்தி நாயனார் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி, சன்னதி தெரு வழியாக எட்டு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தார். அதன்பின்னர் யானையும், சுந்தரமூர்த்தி நாயனாரும் கோவிலுக்குச் சென்றனர்.
கோவிலில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் ஆகியோர் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி, வெள்ளை யானையின் பின்னால் உட்பிரகாரத்தில் உலா வந்து மீண்டும் 108 மகாதேவர் சன்னதியை அடைந்தனர். அங்கு வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி ஜெயந்தி நாதருக்குச் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. இப் பூசைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்குவாரி சேதங்கள் சீரமைக்கப்பட்டதா? ஆட்சியர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 23, ஜூலை 2026 8:53:07 AM (IST)

தூத்துக்குடி கப்பல்கட்டும் தளத்துக்கான இடம் தேர்வு : உப்பள உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி
வியாழன் 23, ஜூலை 2026 8:05:36 AM (IST)

ஈரானில் சிக்கிய தூத்துக்குடி இளைஞர்கள்: மீட்கக் கோரி ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மனு!
வியாழன் 23, ஜூலை 2026 8:02:26 AM (IST)

தூத்துக்குடியில் நீட் தேர்வுக்கு எதிராக சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு - மாணவி உட்பட 16 பேர் கைது!
புதன் 22, ஜூலை 2026 8:33:21 PM (IST)

கஞ்சா வழக்கு: 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!
புதன் 22, ஜூலை 2026 8:25:31 PM (IST)

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி அபிஷேக் குப்தா மனுக்களைப் பெற்றார்!
புதன் 22, ஜூலை 2026 8:20:56 PM (IST)








