» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஈரானில் சிக்கிய தூத்துக்குடி இளைஞர்கள்: மீட்கக் கோரி ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மனு!

வியாழன் 23, ஜூலை 2026 8:02:26 AM (IST)

ஈரான் நாட்டில் போர்ப் பகுதியில் சிக்கியுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் ஊழியர்கள் இருவரை உடனடியாக மீட்க வேண்டும் என பெற்றோர், உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த விமலன் மகன் இவோன்ஸ்டன், அந்தோணிராஜ் மகன் மரிய பார்த்திபன் ஆகிய இருவரை ஓமன் நாட்டில் கப்பல் வேலைக்குச் சேர்த்துவிடுவதாகக் கூறி விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த முகவர் பிரேம்குமார் ரூ. 13 லட்சம் பெற்றுக்கொண்டு ஜூன் 4-ஆம் தேதி அனுப்பி வைத்தார்.

ஓமன் நாட்டில் கப்பல் வேலையில் சேர்ந்த இருவரையும் அங்கிருந்து ஈரான் நாட்டுக்கு அழைத்துச் சென்று சிறிய இழுவை கப்பலில் பணிக்காக ஏற்றியுள்ளனர். அங்கு வேலை கடினமாக இருப்பதாகக் கூறியதற்கு முகவர் முறையாகப் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே அச் சிக்கலில் உள்ள இளைஞர்கள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "ஈரானில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் கடந்த 20 நாட்களாக உணவின்றித் தவித்து வருகிறோம். கடற்பகுதி அருகே அடிக்கடி குண்டுகள் விழுவதால் உயிர் பயத்துடன் இருக்கிறோம். கடவுச்சீட்டு, ஆவணங்களைக் கப்பல் நிறுவனம் பறிமுதல் செய்து வைத்துக்கொண்டு விடுவிக்க மறுக்கிறது. உடனடியாக எங்களை மீட்க வேண்டும்" எனக் கதறியுள்ளனர்.

அச்சுறுத்தலான சூழலில் உள்ள இருவரையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory