» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!

புதன் 22, ஜூலை 2026 3:25:29 PM (IST)

GVMAtcourt.jpg

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மற்றும் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறையின் மனு ஆகியவற்றை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜி.வி. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ-விடம் சுமார் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின்னர், தூத்துக்குடி 1-வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுமதி முன்னிலையில் காவல்துறையினர் அவரை ஆஜர்படுத்தினர். அவரை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பில் ஜாமீன் கோரியும், காவல்துறையினர் சார்பில் 2 நாட்கள் காவல் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தன.

அரசு தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீதேவியும், மார்க்கண்டேயன் தரப்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காசிராஜனும் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுமதி, காவல்துறையின் காவல் மனு மற்றும் எம்.எல்.ஏ-வின் ஜாமீன் மனு ஆகிய இரண்டையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழக்கு விசாரணையைக் காண முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுகவினர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர். அப்போது அங்கிருந்த திமுக மகளிர் அணியினரைச் சந்தித்த மார்க்கண்டேயன், "எத்தனை நாட்கள் சிறையில் இருக்கிறேனோ, அத்தனை நாட்களில் மீண்டும் ஆட்சி மாற்றம் வரும்" எனக் கூறிச் சென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory