» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சனி 18, ஜூலை 2026 8:32:32 PM (IST)
தூத்துக்குடி எட்டயபுரம் சாலைப் பகுதியில், சட்டவிரோத விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்த வாலிபரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலைப் பகுதியில், சட்டவிரோதப் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மேரிஜெமிதா தலைமையில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, எட்டயபுரம் சாலையில் சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற, தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சேர்ந்த அப்துல்கனி மகன் முகமது இஸ்மாயில் (26) என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் மனநல பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:10:40 PM (IST)

தவெக அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது: சட்டமன்றத்தில் மார்க்கண்டேயன் விமர்சனம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:18:42 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு 55-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:12:51 PM (IST)

கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:49:28 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:23:03 PM (IST)








