» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கத்தியைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் நகை, செல்போன் பறிப்பு : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

வெள்ளி 17, ஜூலை 2026 8:27:04 AM (IST)

உடன்குடி அருகே வியாபாரியை வழிமறித்துக் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற இரு நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கொட்டங்காடு இடைச்சி விளையைச் சேர்ந்த வசீகரன் (63), உடன்குடி விலுக்குடியிருப்பு விலக்கில் பழக்கடை நடத்தி வருகிறார். இவர் நிலம் சம்பந்தமாகப் பேசுவதற்காகச் செட்டியாபத்திற்குத் தேரியூர் தென்றல் நகர் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது, தாண்டவன்காடு கிராமத்தில் தங்கிப் பந்தல் வேலை செய்யும் ஆழ்வார்தோப்பைச் சேர்ந்த தொழிலாளி முத்துகிருஷ்ணன் (20) என்பவர் வசீகரனை வழிமறித்துள்ளார். பழக்கடைப் பழக்கத்தின் அடிப்படையில் வசீகரன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அந்த நேரத்தில் அருகில் உள்ள முள் காட்டுப் பகுதியிலிருந்து வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவரும், முத்துகிருஷ்ணனும் இணைந்து வசீகரனைக் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

அவரிடமிருந்த அரை பவுன் எடையுள்ள 2 மோதிரங்கள், சட்டைப் பையில் இருந்த ரூ.5,500 ரொக்கப் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு இருவரும் தப்பியோடியுள்ளனர். அவர்களைப் பிடிக்க முயன்றபோது வசீகரன் கீழே விழுந்து காயமடைந்தார். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து வசீகரன் அளித்த புகாரின் பேரில், குலசேகரப்பட்டினம் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory