» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 4பேர் கைது!

வெள்ளி 10, ஜூலை 2026 8:15:20 PM (IST)

PUkaliaiarrest.jpg

தூத்துக்குடி மாவட்த்தில் திருச்செந்தூர் மற்றும் கடம்பூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிதம்பராபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகக் கடம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவீந்திரன் வழக்குப் பதிவு செய்து, சிதம்பராபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் (43) என்பவரைக் கைது செய்தார். அவரது பெட்டிக்கடையிலிருந்து 5 கிலோ எடை கொண்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தளவாய்புரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 இளைஞர்களைத் திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சோனியா வழக்குப் பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்தார். கைது செய்யப்பட்டவர்கள் தளவாய்புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் (20), சீருடையார்புரத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (20) மற்றும் ஆறுமுகநேரியைச் சேர்ந்த தினேஷ் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 6 கிலோ 400 கிராம் எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

GudkarrestJl10.jpg

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களின் சுயலாபத்திற்காகப் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்து விற்கும் நபர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory