» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அமைச்சர் உத்தரவிட்டும் தூத்துக்குடியில் பார்கள் மூடல்: பார் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 10, ஜூலை 2026 3:54:32 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் உத்தரவிட்டும் பார்கள் செயல்பட இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று பார் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் மதுபான பார்களின் குத்தகை காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பார்களைத் தொடர்ந்து நடத்திட இரண்டு மாதம் அவகாசம் அளித்துத் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அந்த உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபானக் கடைகளின் அருகே செயல்படும் பார்கள் செயல்பட இன்னும் அனுமதி வழங்கப்படாமல் உள்ளது.
தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் 717 மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில், குத்தகை காலம் முடிந்த இதர பார்களும் பூட்டப்பட்டன. விரைவில் புதிய குத்தகை விடப்பட்டுப் பார்கள் செயல்படத் தொடங்கும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த சூழலில், அமைச்சரின் இடைக்கால இரண்டு மாத அவகாச உத்தரவின்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பார்கள் செயல்படத் தொடங்கிவிட்டன.
ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் அமைச்சர் உத்தரவிட்டும் பார்கள் செயல்பட இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் மதுப்பிரியர்கள் மதுவை வாங்கிக் கொண்டு திறந்தவெளிகள், சாலைகள் மற்றும் தெருப் பகுதிகளுக்குச் சென்று அருந்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதுடன், காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசிச் செல்வதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுகின்றன.
எனவே, தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் இதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அமைச்சர் விக்னேஷ் பிறப்பித்த உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் இரண்டு மாத அவகாசத்துடன் மதுபான பார்கள் தொடர்ந்து செயல்பட உடனே அனுமதி அளிக்க வேண்டும் என்றும் பார் உரிமையாளர்கள் மற்றும் மதுப்பிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

30 ஆண்டுகளாக 300 ஸ்டார் ஹோட்டல்களில் நூதன மோசடி: தூத்துக்குடி நபர் ஒடிசாவில் கைது!
வெள்ளி 10, ஜூலை 2026 5:38:14 PM (IST)

தூத்துக்குடியில் நாய் மீது கல்வீசிய விவகாரத்தில் மோதல்; இருவருக்குப் போலீஸ் வலை!
வெள்ளி 10, ஜூலை 2026 5:11:46 PM (IST)

இ-கேசிசி மூலம் வட்டியில்லாப் பயிர்க்கடன் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 10, ஜூலை 2026 4:41:27 PM (IST)

தூத்துக்குடியில் ஜூலை 14-ஆம் தேதி மின்நிறுத்தம்!
வெள்ளி 10, ஜூலை 2026 4:22:53 PM (IST)

பால்பாண்டி நகரில் உடனடியாக தார் சாலை அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
வெள்ளி 10, ஜூலை 2026 4:17:53 PM (IST)

தவெகவில் இணையுமாறு மிரட்டல்? திமுக ஏம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் போலீஸ் விசாரணை!
வெள்ளி 10, ஜூலை 2026 4:05:21 PM (IST)








