» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பால்பாண்டி நகரில் உடனடியாக தார் சாலை அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
வெள்ளி 10, ஜூலை 2026 4:17:53 PM (IST)
தூத்துக்குடி பால்பாண்டி நகரில் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியின் 17-வது வார்டுக்கு உட்பட்ட பால்பாண்டி நகரில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்த பின்னர், தார் சாலை அமைப்பதற்காக ஜல்லி (குண்டு சரள்) பரப்பப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இதுவரை தார் சாலை அமைக்கப்படவில்லை.
இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் தினமும் கடும் சிரமத்திற்கும், விபத்து அபாயத்திற்கும் உள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் சேறும், வெயில் காலங்களில் கடும் தூசும் எழுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
எனவே, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பால்பாண்டி நகரில் தரமான தார் சாலையை விரைந்து அமைத்து பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

30 ஆண்டுகளாக 300 ஸ்டார் ஹோட்டல்களில் நூதன மோசடி: தூத்துக்குடி நபர் ஒடிசாவில் கைது!
வெள்ளி 10, ஜூலை 2026 5:38:14 PM (IST)

தூத்துக்குடியில் நாய் மீது கல்வீசிய விவகாரத்தில் மோதல்; இருவருக்குப் போலீஸ் வலை!
வெள்ளி 10, ஜூலை 2026 5:11:46 PM (IST)

இ-கேசிசி மூலம் வட்டியில்லாப் பயிர்க்கடன் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 10, ஜூலை 2026 4:41:27 PM (IST)

தூத்துக்குடியில் ஜூலை 14-ஆம் தேதி மின்நிறுத்தம்!
வெள்ளி 10, ஜூலை 2026 4:22:53 PM (IST)

தவெகவில் இணையுமாறு மிரட்டல்? திமுக ஏம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் போலீஸ் விசாரணை!
வெள்ளி 10, ஜூலை 2026 4:05:21 PM (IST)

அமைச்சர் உத்தரவிட்டும் தூத்துக்குடியில் பார்கள் மூடல்: பார் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 10, ஜூலை 2026 3:54:32 PM (IST)








