» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தவெகவில் இணையுமாறு மிரட்டல்? திமுக ஏம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் போலீஸ் விசாரணை!
வெள்ளி 10, ஜூலை 2026 4:05:21 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தில் இணையச் சொல்லித் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறிய புகாரின் பேரில், திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
முன்னாள் அமைச்சரும் தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தன்னைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையச் சொல்லி மிரட்டியதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தொடர்பாகத் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு அதிகாரப்பூர்வச் சம்மன் அனுப்பியிருந்தனர். சம்மனை ஏற்றுத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் வந்து ஆஜரானார். அவரிடம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி முன்னிலையில் தீவிர விசாரணை நடைபெற்றது.
சுமார் சில மணி நேர விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அலுவலக வளாகத்தில் காத்திருந்த பத்திரிகையாளர்களை அனிதா ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேட்டி அளித்தார். செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "ஏற்கனவே வெளியில் உங்களிடம் என்ன கூறினேனோ, அதைத்தான் உள்ளே போலீஸ் விசாரணையிலும் தெரிவித்துள்ளேன். உண்மையான திமுக தொண்டனை எவராலும் மிரட்ட இயலாது" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

30 ஆண்டுகளாக 300 ஸ்டார் ஹோட்டல்களில் நூதன மோசடி: தூத்துக்குடி நபர் ஒடிசாவில் கைது!
வெள்ளி 10, ஜூலை 2026 5:38:14 PM (IST)

தூத்துக்குடியில் நாய் மீது கல்வீசிய விவகாரத்தில் மோதல்; இருவருக்குப் போலீஸ் வலை!
வெள்ளி 10, ஜூலை 2026 5:11:46 PM (IST)

இ-கேசிசி மூலம் வட்டியில்லாப் பயிர்க்கடன் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 10, ஜூலை 2026 4:41:27 PM (IST)

தூத்துக்குடியில் ஜூலை 14-ஆம் தேதி மின்நிறுத்தம்!
வெள்ளி 10, ஜூலை 2026 4:22:53 PM (IST)

பால்பாண்டி நகரில் உடனடியாக தார் சாலை அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
வெள்ளி 10, ஜூலை 2026 4:17:53 PM (IST)

அமைச்சர் உத்தரவிட்டும் தூத்துக்குடியில் பார்கள் மூடல்: பார் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 10, ஜூலை 2026 3:54:32 PM (IST)








