» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இ-கேசிசி மூலம் வட்டியில்லாப் பயிர்க்கடன் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 10, ஜூலை 2026 4:41:27 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை, தென்னை மற்றும் நெல் பயிர்களுக்கு ஆண்டு முழுவதும் பருவகாலம் உள்ள நிலையில், புதிய விவசாய உறுப்பினர்களுக்கு 'இ-கேசிசி' (eKCC) முறையில் பயிர்க்கடன் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோரம்பள்ளம், குலையன்கரிசல், பழையகாயல், முக்கானி, ஆறுமுகமங்கலம், ஏரல், பேரூர், சாயர்புரம், செபத்தையாபுரம், சிவகளை, வெள்ளூர் புதுக்குடி, பெருங்குளம், ஆழ்வார்கற்குளம், வல்லநாடு, ஆறுமுகனேரி, ஆத்தூர், காயாமொழி, தென்திருப்பேரை, சேதுக்குவாய்த்தான், நாசரேத், குரும்பூர், ஆதிநாதபுரம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, பள்ளிபத்து, பிச்சிவிளை, சொக்கன்குடியிருப்பு, உடன்குடி, வெள்ளாளன்விளை, கழுங்குவிளை, பழங்குளம், சாஸ்தாவிநல்லூர், அம்பலசேரி, ஆசிர்வாதபுரம், புத்தன்தருவை, மாதவன்குறிச்சி, அரசூர், தண்டுபத்து ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல் எல்லையில் உள்ள புதிய விவசாய உறுப்பினர்களுக்கு இப்பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.விவசாயிகள் இந்தச் சங்கங்களில் 10 ரூபாய் நுழைவுக்கட்டணம் மற்றும் 100 ரூபாய் பங்குத்தொகை செலுத்திப் புதிய உறுப்பினராகச் சேர்ந்து கொள்ளலாம். மேலும் கடன் அனுமதிக்கும் போது கடனுக்குரிய பங்குத்தொகையைச் செலுத்த வேண்டும்.
இப்பயிர்க்கடன்களைச் சங்கங்களை நேரில் அணுகியோ அல்லது பொதுச் சேவை மையங்கள் (CSC) மூலமாகவோ இ-கேசிசி முறையில் பெற்றுக் கொள்ளலாம்.
ரூபாய் 2 லட்சம் வரை: எந்தவிதப் பிணையமும் இன்றிப் பயிர்க்கடன்களைப் பெறலாம்.
ரூபாய் 3 லட்சம் வரை: நகை மற்றும் நில அடமானத்தின் பேரில் கடன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இக்கடன்களுக்கான தவணை காலம் ஒரு வருடமாகும். தவணை தேதிக்குள் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு, அதற்கான முழு வட்டித் தொகையையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். எனவே, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி நடப்பாண்டில் விவசாய உற்பத்தியை அதிகப்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

30 ஆண்டுகளாக 300 ஸ்டார் ஹோட்டல்களில் நூதன மோசடி: தூத்துக்குடி நபர் ஒடிசாவில் கைது!
வெள்ளி 10, ஜூலை 2026 5:38:14 PM (IST)

தூத்துக்குடியில் நாய் மீது கல்வீசிய விவகாரத்தில் மோதல்; இருவருக்குப் போலீஸ் வலை!
வெள்ளி 10, ஜூலை 2026 5:11:46 PM (IST)

தூத்துக்குடியில் ஜூலை 14-ஆம் தேதி மின்நிறுத்தம்!
வெள்ளி 10, ஜூலை 2026 4:22:53 PM (IST)

பால்பாண்டி நகரில் உடனடியாக தார் சாலை அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
வெள்ளி 10, ஜூலை 2026 4:17:53 PM (IST)

தவெகவில் இணையுமாறு மிரட்டல்? திமுக ஏம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் போலீஸ் விசாரணை!
வெள்ளி 10, ஜூலை 2026 4:05:21 PM (IST)

அமைச்சர் உத்தரவிட்டும் தூத்துக்குடியில் பார்கள் மூடல்: பார் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 10, ஜூலை 2026 3:54:32 PM (IST)








