» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய 11ஆம் தேதி சிறப்பு முகாம்!
வியாழன் 9, ஜூலை 2026 5:40:59 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வருகிற 11ஆம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஜுலை - 2026 ஆம் மாதத்திற்கான சிறப்பு முகாம் 11.07.2026 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும், மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 4பேர் கைது!
வெள்ளி 10, ஜூலை 2026 8:15:20 PM (IST)

30 ஆண்டுகளாக 300 ஸ்டார் ஹோட்டல்களில் நூதன மோசடி: தூத்துக்குடி நபர் ஒடிசாவில் கைது!
வெள்ளி 10, ஜூலை 2026 5:38:14 PM (IST)

தூத்துக்குடியில் நாய் மீது கல்வீசிய விவகாரத்தில் மோதல்; இருவருக்குப் போலீஸ் வலை!
வெள்ளி 10, ஜூலை 2026 5:11:46 PM (IST)

இ-கேசிசி மூலம் வட்டியில்லாப் பயிர்க்கடன் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 10, ஜூலை 2026 4:41:27 PM (IST)

தூத்துக்குடியில் ஜூலை 14-ஆம் தேதி மின்நிறுத்தம்!
வெள்ளி 10, ஜூலை 2026 4:22:53 PM (IST)

பால்பாண்டி நகரில் உடனடியாக தார் சாலை அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
வெள்ளி 10, ஜூலை 2026 4:17:53 PM (IST)








