» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்: தலைவர், செயலாளர் தேர்வு - வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு!

வியாழன் 9, ஜூலை 2026 8:50:46 AM (IST)

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் தலைவர், செயலாளர், மகளிர் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து, தகுதி பெற்ற வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தலைவர், செயலாளர், மகளிர் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் எஸ்.பி. ராமச்சந்திரன், ஜே. ராஜேந்திரன், பி. பிள்ளை விநாயகம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு எஸ்.பி. வாரியர், செயலாளர் பதவிக்கு எஸ்.எஸ்.பி. அசோக் ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதேபோல், மகளிர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பித்த எம். ஜஸ்டினா, ஏ. செல்வலட்சுமி, என். உஜியானா ஆகிய மூன்றும் போட்டியின்றி ஏற்கப்பட்டுள்ளன.

துணைத்தலைவர் பதவிக்கு ஜி. ஜஸ்டின், எஸ். ராஜா ஆகிய இருவரிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இணைச்செயலாளர் பதவிக்கு எம். ஆரோக்கியமேரி, எஸ். இப்ராஹிம் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு என். இளவளவன், கே. நான்சி சோபனா ஜெனிபர் ஆகியோரும் களம் காண்கின்றனர்.

ஆண்கள் செயற்குழு உறுப்பினர்கள் பிரிவில் உள்ள இடங்களுக்கு எம். சின்னமுத்து, எம். ஐயப்பன், கே. முனிஸ்குமார், எம். முருகன், எம். முத்து தினேஷ், ஈ.சி. ராஜகுமார் ஆபிரகாம், ராஜ்குமார், எம். சபரிநாதன் ஆகிய 8 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற விரும்பும் வேட்பாளர்கள் 10.07.2026 (வெள்ளிக்கிழமை) முற்பகல் 10:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை தங்களது மனுக்களைத் திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory