» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 1 முதல் கைபேசி தடை உத்தரவு மேலும் தீவிரம்; மீறினால் பறிமுதல்!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:28:30 PM (IST)
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்குள் கைபேசி கொண்டு வருவதற்கான தடை விதிமுறைகள், நாளை (ஜூலை 1) முதல் மேலும் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை இருக்கை பிறப்பித்த உத்தரவின்படி, திருச்செந்தூர் கோயிலில் கடந்த 14.11.2022 முதல் கைபேசி பயன்பாட்டுத் தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவை முழுமையாகச் செயல்படுத்தும் பொருட்டு, 01.07.2026 முதல் இந்த விதிமுறைகள் மேலும் தீவிரமாக்கப்படுகின்றன. இதன்படி பொதுத் தரிசனம், ரூ.100 விரைவு தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வரிசை உள்ளிட்ட அனைத்து நுழைவு வழிகளிலும் பக்தர்கள் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
பரிசோதனையின்போது பக்தர்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவை பாதுகாப்பு நடைமுறைகளின்படி பறிமுதல் செய்யப்பட்டுத் திருக்கோயில் பாதுகாப்பு வைப்பகங்களில் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் தங்களது கைபேசிகளைத் தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகம் சார்பில் பல இடங்களில் கைபேசி வைப்பிடங்கள் (Mobile Deposit Counters) ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த பாதுகாப்பு நடைமுறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 4பேர் கைது!
வெள்ளி 10, ஜூலை 2026 8:15:20 PM (IST)

30 ஆண்டுகளாக 300 ஸ்டார் ஹோட்டல்களில் நூதன மோசடி: தூத்துக்குடி நபர் ஒடிசாவில் கைது!
வெள்ளி 10, ஜூலை 2026 5:38:14 PM (IST)

தூத்துக்குடியில் நாய் மீது கல்வீசிய விவகாரத்தில் மோதல்; இருவருக்குப் போலீஸ் வலை!
வெள்ளி 10, ஜூலை 2026 5:11:46 PM (IST)

இ-கேசிசி மூலம் வட்டியில்லாப் பயிர்க்கடன் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 10, ஜூலை 2026 4:41:27 PM (IST)

தூத்துக்குடியில் ஜூலை 14-ஆம் தேதி மின்நிறுத்தம்!
வெள்ளி 10, ஜூலை 2026 4:22:53 PM (IST)

பால்பாண்டி நகரில் உடனடியாக தார் சாலை அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
வெள்ளி 10, ஜூலை 2026 4:17:53 PM (IST)









G.PitchaiahJun 30, 2026 - 08:44:22 PM | Posted IP 104.2*****