» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வன்கொடுமைத் தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழுவிற்கு விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 4:21:04 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கான புதிய மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினராகச் சேர தகுதியுடையவர்கள் நாளைக்குள் (ஜூன் 16) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10.11.2020 அன்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டது. விதிமுறைகளின்படி இக்குழுவானது மூன்று ஆண்டுகளுக்குள் கலைக்கப்பட வேண்டும் என்பதால், தற்போது நடைமுறையில் உள்ள பழைய குழு முழுமையாகக் கலைக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, புதிய குழுவிற்கான உறுப்பினர்கள் கீழ்க்கண்ட விபரங்களின்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்:
குழுவின் கட்டமைப்பு விபரம்:
தலைவர்: மாவட்ட ஆட்சியர்
உறுப்பினர்: மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்
உறுப்பினர்: நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்
உறுப்பினர்: காவல் கண்காணிப்பாளர்
அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள்: பட்டியல் சாதியினர் / பழங்குடியினரைச் சேர்ந்த மூன்று குரூப் 'ஏ' (Group A) அதிகாரிகள் அல்லது மாநில அரசின் அரசிதழ் பதிவு பெற்ற (Gazetted) அதிகாரிகள்.
அரசு சாரா உறுப்பினர்கள்: பட்டியல் சாதியினர் / பழங்குடியினரைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனங்களை (NGO) உள்ளடக்கிய 5 நபர்களுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பட்டியல் சாதியினர் / பழங்குடியினரைச் சேர்ந்த அரசு சாரா தனிநபர் உறுப்பினர்கள் 3 பேர்.
எனவே, இந்தத் தகுதிகளின்படி இக்குழுவில் உறுப்பினராக இணைய விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள், தூத்துக்குடி மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினருக்கான விண்ணப்பங்களை வருகின்ற 16.06.2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிகபட்சமாக 63 மதுக்கடைகள் மூடல்: மாவட்ட வாரியான பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, ஜூன் 2026 4:31:31 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, ஜூன் 2026 4:00:44 PM (IST)

பைக் நிலைதடுமாறி விபத்து: வாலிபர் உயிரிழப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 3:21:25 PM (IST)

இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை: நண்பருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு விபரீத முடிவு..!
திங்கள் 15, ஜூன் 2026 3:14:03 PM (IST)

ஏழைப் பெண்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் : நல்வாழ்வு சங்கம் கோரிக்கை!
திங்கள் 15, ஜூன் 2026 12:45:00 PM (IST)

கப்பல் கட்டும் தளம் திட்டத்தில் முதல்வர் சரியான முடிவெடுப்பார்: தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் பேட்டி!
திங்கள் 15, ஜூன் 2026 12:38:31 PM (IST)









