» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!
திங்கள் 15, ஜூன் 2026 10:54:50 AM (IST)
தமிழகம் முழுவதும் துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள 24 அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்துத் தமிழக அரசுச் செயலாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழக வருவாய்த்துறையில் நிர்வாக நலன் கருதி, துணை ஆட்சியர் நிலையில் பணிபுரிந்து வரும் 24 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள்.
அதன்படி, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியராக இதுவரை பணிபுரிந்து வந்த பிரபு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மதுரை தெற்கு மாவட்ட சில்லறை விற்பனை மேலாளராக நியமிக்கப்பட்டு, புதிய பொறுப்பை ஏற்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 24 துணை ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது வருவாய்த்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியின் புதிய கோட்டாட்சியர் யார் என்பது குறித்த விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு செய்துங்கநல்லூரில் உற்சாக வரவேற்பு
புதன் 17, ஜூன் 2026 12:35:50 PM (IST)

போலீஸ் வேலைக்கு செல்ல முடியாததால் கல்லூரி மாணவி தற்கொலை!
புதன் 17, ஜூன் 2026 11:53:17 AM (IST)

விளாத்திகுளம் அருகே மோட்டார் பைக் தீ வைத்து எரிப்பு
புதன் 17, ஜூன் 2026 11:41:42 AM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 19-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 17, ஜூன் 2026 7:37:14 AM (IST)

திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் : மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
புதன் 17, ஜூன் 2026 7:32:01 AM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பரிதாப பலி!
புதன் 17, ஜூன் 2026 7:27:37 AM (IST)









