» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு செய்துங்கநல்லூரில் உற்சாக வரவேற்பு
புதன் 17, ஜூன் 2026 12:35:50 PM (IST)

புதிய பெட்டிகள் பொருத்தப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் வந்தடைந்ததை முன்னிட்டு பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் பயணியர் சங்கத்தினர் கலந்து கொண்டு, பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும், ரயிலின் லோகோ பைலட் அருள்செல்வன், உதவி லோகோ பைலட் அய்யாசாமி மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் சித்திரைப்புத்திரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பயணியர் சங்க உறுப்பினர்களான திருமலை, வேம்புதுரை, அப்துல், அப்துல்காதர், மாசிலாமணி, முனைவர் அபிஷ்விக்னேஷ், கோபால், இசக்கிராஜா, பாசில், யாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை கல்லால் தாக்கிய கணவர் கைது : மது குடிப்பதற்கு பணம் தராததால் வெறிச்செயல்!
வெள்ளி 19, ஜூன் 2026 12:06:11 PM (IST)

வீட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் சாவு : தூத்துக்குடியில் சோகம்!
வெள்ளி 19, ஜூன் 2026 11:47:24 AM (IST)

அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை - தூத்துக்குடி அருகே பரபரப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 10:58:01 AM (IST)

ஆட்டோ மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 10:45:35 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: பச்சிளம் குழந்தையைத் தவிக்கவிட்டு சோகம்!
வெள்ளி 19, ஜூன் 2026 10:34:03 AM (IST)

மாதாந்திர பராமரிப்பு பணி: சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி உட்பட பல பகுதிகளில் நாளை மின்தடை!
வெள்ளி 19, ஜூன் 2026 10:19:53 AM (IST)









