» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஜூன் 19-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 17, ஜூன் 2026 7:37:14 AM (IST)
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் மாதாந்திர தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் ஜூன் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாதம் தோறும் 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த மாதத்திற்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் 19.06.2026 (வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணிக்குக் கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணித் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இமுகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree), பி.இ (B.E), டிப்ளமோ (Diploma), ஐ.டி.ஐ (ITI), கனரக/இலகுரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் கணினிப் பயிற்சி (Computer training) முடித்த தகுதியுடைய வேலைநாடுநர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான இளைஞர்கள் தங்களது சுயவிபரக் குறிப்பு (Biodata) மற்றும் அசல் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் இமுகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்றுப் பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு (Seniority) எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. அது தொடர்ந்து நடைமுறையிலேயே இருக்கும்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் (Employers) மற்றும் வேலைநாடுநர்கள் (Job seekers) அனைவரும் தங்களது விபரங்களை முன்கூட்டியே www.tnprivatejobs.tn.gov.in என்ற அரசு இணையதளப் பக்கத்தில் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும். மேலும், இந்த முகாம் தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் உடனுக்குடனான தகவல்களைத் தெரிந்துகொள்ள 'THOOTHUKUDI EMPLOYMENT OFFICE' என்ற அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலில் (Telegram Channel) இணைந்தும் இளைஞர்கள் பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரையில் ஒதங்கும் ஜெல்லி மீன்கள் : மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
புதன் 17, ஜூன் 2026 7:32:01 AM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பரிதாப பலி!
புதன் 17, ஜூன் 2026 7:27:37 AM (IST)

வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.4.51 கோடி ஓய்வூதிய நிதி மோசடி: அதிகாரிகள் 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு!
புதன் 17, ஜூன் 2026 7:22:55 AM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, ஜூன் 2026 9:26:19 PM (IST)

கயத்தார் வட்டத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு: அரசு அலுவலகக் கோப்புகள், பதிவேடுகள் சரிபார்ப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:17:16 PM (IST)

அடுத்தடுத்து 4 தோட்டங்களில் இரும்புக் கதவுகள் திருட்டு: வாலிபர் கைது!
செவ்வாய் 16, ஜூன் 2026 7:57:22 PM (IST)









