» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளம் அருகே மோட்டார் பைக் தீ வைத்து எரிப்பு

புதன் 17, ஜூன் 2026 11:41:42 AM (IST)

விளாத்திகுளம் அருகே மோட்டார் பைக் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கம்பத்து பட்டி கிராமம் தெற்கு தெருவில் வசிப்பவர் மாணிக்கம். இவரது மகன் முருகானந்தம் (46) ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆன இவர் ஆடுகளை மேய்ப்பதற்காக தனது இருசக்கர வாகனமான பைக்கில் காட்டுப் பகுதிக்குள் சென்று அங்கு ஒரு வேப்பமரத்து அடியில் நிறுத்திவிட்டு ஆடுகளை மேய்க்க சென்று விட்டாராம்.

பின்னர், மாலையில் வந்து பார்த்தபோது பைக் முழுவதும் தீ வைத்துஎரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதை பார்த்த முருகானந்தம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது பைக்குக்கு தீ வைத்து எரித்தது யார் என்று அக்கம் பக்கத்தில் விசாரித்தார். இது சம்பந்தமாக புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory