» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாட்கோ மூலம் அழகுக்கலை, சிகை அலங்காரம் பயிற்சிகள் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 3:27:22 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை சிகை அலங்காரம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை (Master Certification in Bridal Makeup Artistry Course) மற்றும் சிகை அலங்காரம் (Diploma in Creative hair dressing chemical treatment Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ,3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் மேலும் திருச்சி மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதிபெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்நிறுவனத்தின் மூலமாக ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் ரூ.15000/- முதல் ரூ.25,000/- வரையும் வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழைய இரும்புக்கடையில் திருட்டு: 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது!
திங்கள் 8, ஜூன் 2026 8:31:34 PM (IST)

ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் 50 பேர் திமுகவில் இணைந்தனர் : கீதாஜீவன் முன்னிலையில் ஐக்கியம்!
திங்கள் 8, ஜூன் 2026 8:11:38 PM (IST)

எடப்பாடி பழனிசாமியுடன் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் திடீர் சந்திப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 5:39:11 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 485 கோரிக்கை மனுக்கள் குவிந்தன!
திங்கள் 8, ஜூன் 2026 4:01:04 PM (IST)

இறையடியார் அந்தோனி சூசை நாதருக்கு புனிதர் பட்டம்: தூத்துக்குடியில் சிறப்பு பிரார்த்தனை!
திங்கள் 8, ஜூன் 2026 3:40:41 PM (IST)

அமைச்சர் ஸ்ரீநாத் வளர்ச்சியைப் பொறுக்காமல் அவதூறா? பாண்டியாபதி சங்கம் கண்டனம்!
திங்கள் 8, ஜூன் 2026 3:14:03 PM (IST)










