» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் 50 பேர் திமுகவில் இணைந்தனர் : கீதாஜீவன் முன்னிலையில் ஐக்கியம்!
திங்கள் 8, ஜூன் 2026 8:11:38 PM (IST)

தூத்துக்குடியில், தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாவட்ட மற்றும் மாநகர முக்கியப் பொறுப்பாளர்கள் உட்பட சுமார் 50 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாவட்ட தலைவர் குழந்தை பாண்டி, மாவட்ட செயலாளர் வெயிலாட்சி, மாநகர தலைவர் சக்தி செல்வன், மாவட்ட துணை செயலாளர் அருண்குமார், மாநகர துணை செயலாளர்கள் முருகேசன், உமையலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கமர்தீன் பாய் மற்றும் செயற்குழு உறுப்பினர் சத்யா ஆகியோர் தலைமையில், அக்கட்சியின் தொண்டர்கள் சுமார் 50 பேர் திமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்வில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்தும், வேஷ்டி மற்றும் சேலைகள் வழங்கியும் கௌரவித்து, தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டதற்கு வாழ்த்தி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியின் போது பேசிய கீதாஜீவன், "திமுக ஆட்சியில் தத்தமது பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், ஸ்டாலின் அவர்களின் மாபெரும் சாதனைகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். வரும் காலத்தில் கட்சியின் தூணாக விளங்கி, திமுகவின் மாபெரும் வெற்றிக்குத் தங்களின் முழு உழைப்பையும் வழங்கி அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
விழாவில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், பிரபு, மருத்துவ அணி தலைவர் அருண்குமார், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி அல்பர்ட் உட்பட மாவட்ட, மாநகர திமுக முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேங்காப்பட்டணம், குளச்சல் கடற்கரை பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் ஆய்வு!
திங்கள் 8, ஜூன் 2026 8:41:33 PM (IST)

பழைய இரும்புக்கடையில் திருட்டு: 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது!
திங்கள் 8, ஜூன் 2026 8:31:34 PM (IST)

எடப்பாடி பழனிசாமியுடன் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் திடீர் சந்திப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 5:39:11 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 485 கோரிக்கை மனுக்கள் குவிந்தன!
திங்கள் 8, ஜூன் 2026 4:01:04 PM (IST)

இறையடியார் அந்தோனி சூசை நாதருக்கு புனிதர் பட்டம்: தூத்துக்குடியில் சிறப்பு பிரார்த்தனை!
திங்கள் 8, ஜூன் 2026 3:40:41 PM (IST)

தாட்கோ மூலம் அழகுக்கலை, சிகை அலங்காரம் பயிற்சிகள் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 3:27:22 PM (IST)










