» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பழைய இரும்புக்கடையில் திருட்டு: 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது!

திங்கள் 8, ஜூன் 2026 8:31:34 PM (IST)

குரும்பூர் அருகே பழைய இரும்புக்கடையில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, காப்பர் கம்பிகள், வாகனப் பேட்டரிகளைத் திருடிச் சென்ற வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கோயில் பிச்சை. இவரது மகன் லீபனான்ஜான் ஜெபமணி (32). இவர் குரும்பூர் - நாசரேத் பிரதான சாலையில் உள்ள ஆலடிவிளை பகுதியில் பழைய இரும்பு வியாபாரக் கடை ஒன்று நடத்தி வருகிறார். இவருடைய கடையில் குரும்பூர் பரதர் தெருவைச் சேர்ந்த ரத்தினகுமார் மகன் சொர்ணவருண் என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 6-ஆம் தேதி சனிக்கிழமை இரவு லீபனான்ஜான் ஜெபமணியும், ஊழியர் சொர்ண வருணும் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டுப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர். பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கடையைத் திறப்பதற்காக வந்தபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ எடையுள்ள காப்பர் கம்பிகள் மற்றும் 3 இருசக்கர வாகனப் பேட்டரிகள் திருட்டுப்போயிருப்பது தெரியவந்தது.  இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.11,000 ஆகும். இச்சம்பவம் குறித்துக் கடையின் உரிமையாளர் லீபனான்ஜான் ஜெபமணி குரும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

காவல் துறையினர் விசாரணையில், தூத்துக்குடி மேலசண்முகபுரம் புதுக்காலனி முதல் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மகன் சாம் (21), அதே பகுதியைச் சேர்ந்த ஷாகுல்நிஷார் (19) மற்றும் இவர்களுடன் இணைந்த 3 சிறுவர்கள் இந்தத் துணிகரத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சாம், ஷாகுல்நிஷார் மற்றும் 3 சிறுவர்கள் உட்பட ஐந்து பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory