» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு: 2பேர் கைது; மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!

திங்கள் 8, ஜூன் 2026 12:38:41 PM (IST)

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் பறித்த 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 2பேரை தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி வி.இ. ரோடு, எஸ்.வி. காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் சந்திராயப்பர் மகன் ஜென்சன் (26). இவர் சம்பவததன்று செல்போனில் பேசிக் கொண்டே, தனது வீட்டின் அருகே தனியார் பள்ளிக்கு அருகாமையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், திடீரென ஜென்சனை வழிமறித்து அவர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.

இச்சம்பவம் குறித்து ஜென்சன் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் முத்துச்செல்வி குற்ற வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காவல் துறையினர் நடத்திய அதிரடித் தேடுதல் வேட்டையில், இதில் தொடர்புடைய தாமோதர் நகரைச் சேர்ந்த சங்கர் மகன் சேர்மகுமார் மற்றும் கருணாநிதி நகரைச் சேர்ந்த முருகன் மகன் சூரிய பிரகாஷ் (21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். 

மேலும், அவரிடமிருந்து ஜென்சனிடம் பறித்துச் செல்லப்பட்ட ஒப்போ கைபேசியையும் காவல் துறையினர் கைப்பற்றினர். இந்த வழக்குத் தொடர்பாக தூத்துக்குடி அந்தோனியாபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் அருண்குமார் (19), மற்றும் மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்மராஜ் மகன் சரவணன் (24) ஆகிய 2பேரை தேடி வருகின்றனர். இந்த செல்போன் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory