» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிராக்டர்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கக் கோரி தூத்துக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
திங்கள் 8, ஜூன் 2026 11:56:40 AM (IST)

டிராக்டர்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கக் கோரி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேளாண்மைத் தொழிலில் பயன்படுத்தப்படும் டிராக்டர்களை முழுமையாக விவசாயக் கருவிகள் பட்டியலில் இணைத்து, அவற்றுக்கான சாலை வரி, ஜிஎஸ்டி, வாட் வரி (மற்றும் என்.சி.சி.டி உள்ளிட்ட பல்வேறு வரிகளை முற்றிலும் நீக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய அளவில் டிராக்டர்களின் டீசல் பயன்பாடு மூலம் மட்டுமே ஓராண்டில் சுமார் ரூ.56,000 கோடியை இரு அரசுகளும் வரியாக வசூலிப்பதால், விவசாயிகளின் குடும்ப வருமானத்தில் 15.20 சதவீதம் இந்த டீசல் வரிக்காகவே வீணாகிறது என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் இன்று திரண்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர் மற்றும் உழவர்கள் தங்களின் கையொப்பமிட்ட விரிவான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் வழியாக மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு: 2பேர் கைது; மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 8, ஜூன் 2026 12:38:41 PM (IST)

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணக் கொள்ளை : ஆய்வுக்குழு அமைக்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 8, ஜூன் 2026 12:28:06 PM (IST)

பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்!
திங்கள் 8, ஜூன் 2026 11:46:39 AM (IST)

தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: வாலிபர் கைது; செல்போன் பறிமுதல்!
திங்கள் 8, ஜூன் 2026 11:07:04 AM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : 2 பேர் உயிரிழப்பு
திங்கள் 8, ஜூன் 2026 10:06:07 AM (IST)

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பங்கள் வரவேற்பு - கோட்ட மேலாளர் அழைப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 8:42:53 AM (IST)










