» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : 2 பேர் உயிரிழப்பு

திங்கள் 8, ஜூன் 2026 10:06:07 AM (IST)

கோவில்பட்டி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி மகன் அருண்பாண்டியன் (23). இவர் நேற்று இரவு நேரத்தில் இளம்புவனத்திலிருந்து கோவில்பட்டி நோக்கித் தனது பைக்கில் வந்துகொண்டிருந்தார். அதே நேரத்தில், சிதம்பராபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சுப்புராஜ் (36) கோவில்பட்டிக்கு வந்துவிட்டு, மீண்டும் தனது சொந்த ஊருக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார்.

கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே இருவரது மோட்டார் பைக்குகளும் வந்தபோது, எதிர்பாராத விதமாக இரண்டு பைக்குகளும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பலமாக மோதி விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர விபத்தில் அருண்பாண்டியன் மற்றும் சுப்புராஜ் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலின் பேரில், நாலாட்டின்புதூர் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான அருண்பாண்டியன் மற்றும் சுப்புராஜ் ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory