» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பத்திரப்பதிவுத் துறையில் புதிய நடைமுறை அறிமுகம்: நேரில் செல்லாமல் இணையவழியில் ஆவணங்கள் பதிவு
ஞாயிறு 7, ஜூன் 2026 8:39:26 PM (IST)

பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், இருந்த இடத்திலிருந்தே இணையவழியில் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையைத் தமிழகப் பத்திரப்பதிவுத் துறை அறிவித்துள்ளது.
"வருகை இல்லா ஆவணப்பதிவு" என்ற இந்த புதிய முறை விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளதால், அதற்கான விரிவான நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.24 மணி நேரச் சேவை மற்றும் வாட்ஸ்அப்பில் ஆவணம்:இந்தப் புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எந்த நேரத்திலும் (24x7x365) இணையதளம் மூலமாகத் தங்களது ஆவணங்களை எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையவழியில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களுக்குச் சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், அவரது மின்னணு கையொப்பத்துடன் (Digital Signature) கூடிய அசல் ஆவணம் சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ்அப் (WhatsApp) எண் மற்றும் இணையதள உள்நுழைவு (Login) பக்கத்திற்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.
இணையவழிப் பதிவிற்கு முதற்கட்டமாக முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள் மற்றும் வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள் ஆகிய முக்கிய ஆவணங்களுக்கு மட்டுமே சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது:
இச்சேவையைப் பயன்படுத்த ஆவணத்தை எழுதுபவர்கள், பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் அனைவரும் தங்களது அடையாள ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொடர்ந்து, உரிய அங்கீகரிக்கப்பட்ட ஆணையத்தின் தளம் மூலமாகக் கைரேகை அல்லது கருவிழிப் படலம் (Iris) வழியாகத் தங்களது பயோமெட்ரிக் சரிபார்ப்பை இணையவழியிலேயே மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் இச்சேவையில் ஏதேனும் தொழில்நுட்பக் குறைபாடுகள் அல்லது உதவிகளைப் பெறத் தேவையான தொடர்பு எண்களும் இந்த அறிவிப்பில் தனியாக வெளியிடப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:01:17 PM (IST)

நெல்லை சரக புதிய டி.ஐ.ஜி-யாக திருநாவுக்கரசு பொறுப்பேற்பு!
ஞாயிறு 7, ஜூன் 2026 7:50:29 PM (IST)

சோதனைச் சாவடியில் கார் மோதி தலைமை காவலர் காயம்! ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு, கார் பறிமுதல்!
ஞாயிறு 7, ஜூன் 2026 7:31:29 PM (IST)

தூத்துக்குடியில் 3.300 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
ஞாயிறு 7, ஜூன் 2026 7:26:02 PM (IST)

பிள்ளையார்நத்தத்தில் விவசாயம் செழிக்க கலச விளக்கு வேள்வி பூஜை
ஞாயிறு 7, ஜூன் 2026 7:19:30 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 63 மதுபானக் கடைகள் மூடல்! பெண்கள் பெரும் மகிழ்ச்சி; மதுப்பிரியர்கள் அவதி!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:32:07 AM (IST)










