» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:01:17 PM (IST)
திருச்செந்தூரில் வீடுபுகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பாரதியார் தெருப் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினித்முத்துராஜ் (20) என்பவர் 11-ஆம் வகுப்பு முடித்துவிட்டு 12-ஆம் வகுப்பு செல்லவிருக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தபோது வினித் முத்துராஜ், சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். அதன் பேரில், வினித்முத்துராஜ் மீது காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.சண்முகவடிவு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். தப்பியோடிய வினித்முத்துராஜை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்திரப்பதிவுத் துறையில் புதிய நடைமுறை அறிமுகம்: நேரில் செல்லாமல் இணையவழியில் ஆவணங்கள் பதிவு
ஞாயிறு 7, ஜூன் 2026 8:39:26 PM (IST)

நெல்லை சரக புதிய டி.ஐ.ஜி-யாக திருநாவுக்கரசு பொறுப்பேற்பு!
ஞாயிறு 7, ஜூன் 2026 7:50:29 PM (IST)

சோதனைச் சாவடியில் கார் மோதி தலைமை காவலர் காயம்! ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு, கார் பறிமுதல்!
ஞாயிறு 7, ஜூன் 2026 7:31:29 PM (IST)

தூத்துக்குடியில் 3.300 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
ஞாயிறு 7, ஜூன் 2026 7:26:02 PM (IST)

பிள்ளையார்நத்தத்தில் விவசாயம் செழிக்க கலச விளக்கு வேள்வி பூஜை
ஞாயிறு 7, ஜூன் 2026 7:19:30 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 63 மதுபானக் கடைகள் மூடல்! பெண்கள் பெரும் மகிழ்ச்சி; மதுப்பிரியர்கள் அவதி!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:32:07 AM (IST)










