» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிள்ளையார்நத்தத்தில் விவசாயம் செழிக்க கலச விளக்கு வேள்வி பூஜை
ஞாயிறு 7, ஜூன் 2026 7:19:30 PM (IST)

ஆன்மிக குரு பங்காரு அம்மா அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு பிள்ளையார்நத்தம் கிராமத்தில் விவசாயம் செழிக்க கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் 86வது அவதார பெருமங்கல விழா நடைபெற்றது. ஓம்சக்தி கொடியை கோவில்பட்டிமன்ற தலைவர் அப்பாசாமி ஏற்றி வைத்தார். மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
குருபூஜை, வினாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு முக்கோண வடிவிலான பிரதான யாககுண்டம் அமைக்கப்பட்டு கலச விளக்கு விளக்கு வேள்விபூஜை நடைபெற்றது. வேள்வியை ஆன்மிக இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை மாவட்ட மகளிர் அணி தலைவி கே.பத்மாவதி வழங்கினார்.
அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை வேள்விக்குழு கிருஷ்ண நீலா துவக்கி வைத்தார். பங்காரு அம்மாவின் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் போடி நாயக்கனூர் ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆதிபராசக்தி இயக்கம் மூலம் இயற்கை வழிபாடு என்ற தலைப்பில் மதுரை பேராசிரியை இந்திராகாந்தி ஆகியோர் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி தென்பாகம் எஸ்.ஐ.முருகேசன், ஆன்மிக இயக்க ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், இந்திராநகர் அழகுமாணிக்கம், கழுகுமலை அழகர், மந்திதோப்பு மன்ற தலைவர் பண்டார முருகன், வானரமுட்டி நாறும்பூநாதன், முருகன், பிள்ளையார்நத்தம் ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்திரப்பதிவுத் துறையில் புதிய நடைமுறை அறிமுகம்: நேரில் செல்லாமல் இணையவழியில் ஆவணங்கள் பதிவு
ஞாயிறு 7, ஜூன் 2026 8:39:26 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:01:17 PM (IST)

நெல்லை சரக புதிய டி.ஐ.ஜி-யாக திருநாவுக்கரசு பொறுப்பேற்பு!
ஞாயிறு 7, ஜூன் 2026 7:50:29 PM (IST)

சோதனைச் சாவடியில் கார் மோதி தலைமை காவலர் காயம்! ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு, கார் பறிமுதல்!
ஞாயிறு 7, ஜூன் 2026 7:31:29 PM (IST)

தூத்துக்குடியில் 3.300 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
ஞாயிறு 7, ஜூன் 2026 7:26:02 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 63 மதுபானக் கடைகள் மூடல்! பெண்கள் பெரும் மகிழ்ச்சி; மதுப்பிரியர்கள் அவதி!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:32:07 AM (IST)










