» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருவைகுண்டம், ஏரல் வட்டத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:27:36 AM (IST)

திருவைகுண்டம் மற்றும் ஏரல் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.
அணியாபரநல்லூரில் ரூ.4665.77 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு இயங்கும் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்.,-ன் பால், நெய், தயிர், மோர், பாதாம் பவுடர் தயாரிப்பு நிறுவனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அணியாபரநல்லூரில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருத்துவ பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று பரிசோதனைகள் செய்யப்படுவதை பார்வையிட்டார்.
தொடர்ந்து, திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமூலக்கரை ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் மூலம் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் மற்றும் சூழல் கடன்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றது என்பது தொடர்பாக மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் கேட்டறிந்தார். மேலும், ஸ்ரீமூலக்கரை ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் மூலம் கடன் பெற்று மாடு வளர்த்து அதன் மூலம் பால் வியாபாரம் செய்து வரும் பயனாளியின் வீட்டிற்கு சென்று, பார்வையிட்டு அவருடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, திருவைகுண்டம் வட்டம், விவசாயிகளின் கோரிக்கையான கருங்குளத்தில் இருந்து திருவைகுண்டம் வரை கருமேனியாற்றின் இணைப்பு திட்டம் குறித்து பொதுப்பணித் துறை நீர் வளக்கோட்டத்தினருடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ஏரல் வட்டம், மஞ்சள்நீர்காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் 20 மி.கா. திட்ட சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மாவட்ட நீர் பரிசோதனை ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் நாகராஜன், தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, செயற்பொறியாளர், நீ.வ.து., கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்டம் தங்கராஜன் செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் குமார், வட்டாட்சியர்கள் தாஹிர் அஹமது (திருவைகுண்டம்), செல்வகுமார் (ஏரல்), திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆவின் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்திரப்பதிவுத் துறையில் புதிய நடைமுறை அறிமுகம்: நேரில் செல்லாமல் இணையவழியில் ஆவணங்கள் பதிவு
ஞாயிறு 7, ஜூன் 2026 8:39:26 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:01:17 PM (IST)

நெல்லை சரக புதிய டி.ஐ.ஜி-யாக திருநாவுக்கரசு பொறுப்பேற்பு!
ஞாயிறு 7, ஜூன் 2026 7:50:29 PM (IST)

சோதனைச் சாவடியில் கார் மோதி தலைமை காவலர் காயம்! ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு, கார் பறிமுதல்!
ஞாயிறு 7, ஜூன் 2026 7:31:29 PM (IST)

தூத்துக்குடியில் 3.300 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
ஞாயிறு 7, ஜூன் 2026 7:26:02 PM (IST)

பிள்ளையார்நத்தத்தில் விவசாயம் செழிக்க கலச விளக்கு வேள்வி பூஜை
ஞாயிறு 7, ஜூன் 2026 7:19:30 PM (IST)










